Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பல மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்

பல மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்

By: vaithegi Wed, 20 July 2022 7:04:55 PM

பல மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்

இந்தியா: இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. அதன்படி, உத்திரபிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மிக அதிக கனமழை பெய்து கொண்டு வருகிறது. மேலும், பல மாநிலங்களில் கூடுதல் கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே பேரழிவு நிகழ்வுகள் பல நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் மற்றும் அதன் அண்டை பகுதிகளில் சூறாவளி சுழற்சி வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதாக வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. மேலும், உத்தரகாண்ட் முழுவதும் இன்றிலிருந்து வரும் ஜூலை 24 ஆம் தேதி வரைக்கும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, மிக அதிக கனமழையின் காரணமாக இன்று உத்தரகாண்ட் மாநிலம் முழுக்க ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

red alert,meteorological centre ,ரெட் அலர்ட்,வானிலை ஆய்வு மையம்

மேலும், நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று சம்பவத், நைனிடால், உதம் சிங் நகர், டேராடூன், தெஹ்ரி கர்வால், பவுரி கர்வால் மற்றும் ஹரித்வார் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மீதமுள்ள மாவட்டங்கள் அனைத்திற்கும் ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து பித்தோராகர், பாகேஷ்வர், சாமோலி மற்றும் உத்தர்காசி ஆகிய பகுதிகளுக்கு நாளையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Tags :