Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெட்ரோ ரயில் திட்ட பணிகள் ... அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், ஓராண்டுக்குள் சரி செய்யப்படும்

மெட்ரோ ரயில் திட்ட பணிகள் ... அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், ஓராண்டுக்குள் சரி செய்யப்படும்

By: vaithegi Mon, 06 Feb 2023 6:21:50 PM

மெட்ரோ ரயில் திட்ட பணிகள் ...   அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், ஓராண்டுக்குள் சரி செய்யப்படும்

சென்னை: போக்குவரத்து நெரிசல் அடுத்த ஓராண்டுக்குள் சரி செய்யப்படும் என மெட்ரோ நிர்வாக இயக்குனர் தெரிவிப்பு ..... சென்னையில் தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த மெட்ரோ ரயில் திட்டம் சேவையை விரிவுபடுத்தும் வகையில் தற்போது சென்னையில் 2 -ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

ரூ. 63,000 கோடி செலவில் 3 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் காரணமாக தற்போது சென்னையில் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் உயர்ந்து காணப்படுகிறது. இப்போக்குவரத்து நெரிசல் அடுத்த ஓராண்டுக்குள் சரி செய்யப்படும் என மெட்ரோ நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

traffic jam,metro train ,போக்குவரத்து நெரிசல்,மெட்ரோ ரயில்

மேலும் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில்களுக்கான தூண்கள் எழுப்பப்பட்டு வருகிறது இப்பணிகள் முடிவடைந்த பிறகு சாலைகள் சீர் செய்யப்படும் என கூறினார்.

சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அரசு ஒப்புதல் அளித்ததும் பணிகள் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :