Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் மெட்ரோ ரெயில் திட்ட பணி .. மேலும் 6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் நீட்டிப்பு

பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் மெட்ரோ ரெயில் திட்ட பணி .. மேலும் 6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் நீட்டிப்பு

By: vaithegi Sun, 04 Sept 2022 9:56:02 PM

பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் மெட்ரோ ரெயில் திட்ட பணி ..  மேலும்  6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் நீட்டிப்பு

சென்னை மேலும் 6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் .... பூந்தமல்லி: பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் பூந்தமல்லி பஸ் நிலையம் முதல் கரையான்சாவடி வரை மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே இதனால் கடந்த மே மாதம் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை பகல் மற்றும் இரவு முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் 6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் நீட்டிப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து அதன்படி பூந்தமல்லி கரையான்சாவடியில் இருந்து பூந்தமல்லி பஸ் நிலையம் வரை லாரி, டிரக், பஸ், ஆகியவை செல்வதற்கு அனுமதி இல்லை. ஆம்புலன்ஸ், இளகுரக மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போரூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் வாகனங்கள்: அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கரையான்சாவடி சந்திப்பில் வலப்புறம் திரும்பி ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று பூந்தமல்லி புலவரச்சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு இடது புறமாக சென்று பூந்தமல்லி பஸ் நிலையத்தை அடைய வேண்டும்.

traffic change,poontamalli ,போக்குவரத்து மாற்றம் ,பூந்தமல்லி

இதை தொடர்ந்து பேருந்து அல்லாத இதர வணிக மற்றும் கனரக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் இருந்து வலது புறம் சென்று சவீதா பல் மருத்துவமனை சந்திப்பு வழியாக தங்கள் இலக்கை அடைய பூந்தமல்லி புறவழிச் சாலையில் இடதுபுறம் திரும்பி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். கோயம்பேடு, மதுரவாயல் பக்கம் இருந்து பூந்தமல்லிக்கு செல்லும் வாகனங்கள்: சென்னை மாநகர பேருந்துகள் குமணன்சாவடி வழியாக சென்று கரையான்சாவடி சந்திப்பில் வலது புறம் திரும்பி ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் பூந்தமல்லி புறவழிச்சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகில் அம்பேத்கர் சிலைக்கு இடது புறமாக சென்று பூந்தமல்லி பஸ் நிலையத்தை அடைய வேண்டும். இதர அரசு பேருந்துகள், வணிகம் மற்றும் கனரக வாகனங்கள் சவீதா பல் மருத்துவமனையில் இருந்து நேராக புறவழிச் சாலை வழியாக பூந்தமல்லி பாலத்தை சென்று அடையலாம்.

மாங்காட்டில் இருந்து பூந்தமல்லி செல்லும் வாகனங்கள்: அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துள் கரையான்சாவடி சந்திப்பில் வளப்புறம் திரும்பி ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று பூந்தமல்லி புறவழிச் சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு இடது புறமாக சென்று பூந்தமல்லி பஸ் நிலையத்தை அடையலாம். இதர வணிக மற்றும் கனரக வாகனங்கள் மாங்காடு சந்திப்பில் இருந்து வலது புறம் சென்று சவீதா பல் மருத்துவமனை சந்திப்பு வழியாக தங்கள் இலக்கை அடைய பூந்தமல்லி புறவழிச் சாலையில் இடது புறம் திரும்பி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். பருத்திப்பட்டில் இருந்து ஆவடி சாலையில் பூந்தமல்லி நோக்கி வரும் வணிக வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்கள் சென்னை பெங்களூர் பூந்தமல்லி புறவழி சாலையில் வலது அல்லது இடது புறம் திரும்பி செல்ல வேண்டும் நேராக கரையான்சாவடி நோக்கி செல்லக்கூடாது. சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் நசரத்பேட்டையில் இருந்தும் ஓ.ஆர்.ஆர் வெளிவட்ட சாலையில் இருந்தும் பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் வழக்கம் போல் பூந்தமல்லி பஸ் நிலையம் செல்லலாம். வணிக மற்றும் கனரக வாகனங்கள் பூந்தமல்லி பேருந்து நிலையம் நோக்கி செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து பி.எஸ்.என்.எல் அருகில் இடதுபுறம் திரும்பி பூந்தமல்லி புறவழிச் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம். பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து பஸ்களும் பாரிவாக்கம் சாலை வழியாக பூந்தமல்லி புறவழிச் சாலைக்கு சென்றடைய வேண்டும். நசரத்பேட்டை திருவள்ளூர் மார்க்கமாக அல்லது ஓ.ஆர்.ஆர் வெளிவட்ட சாலை வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள் பாரிவாக்கம் சாலை, பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சென்று தங்கள் இலக்கை அடையலாம். போரூர் மாங்காடு மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் பூந்தமல்லி புறவழிச் சாலையில் வலது புறம் திரும்பி சவீதா பல் மருத்துவமனை சென்று மீண்டும் வலது புறம் திரும்பி குமணன்சாவடி சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஆவடி மார்க்கமாக செல்லும் அனைத்தும் பேருந்துகளும் பூந்தமல்லி புறவழிச் சாலையில் சென்னீர்குப்பம் சென்று இடது புறம் திரும்பி தங்கள் இலக்கை அடையலாம். இதையடுத்து பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிக்க இப்போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஆவடி காவல் ஆணையராக செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :