Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கல் பண்டிகையை ஒட்டி மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

By: Nagaraj Thu, 12 Jan 2023 11:51:38 PM

பொங்கல் பண்டிகையை ஒட்டி மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை: நேரம் நீட்டிப்பு... பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வரும் 13, 14-ம் தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தை நீட்டிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மட்டும் நெரிசல் மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

report,metro,administration,travel,notice,service,time ,அறிக்கை, மெட்ரோ, நிர்வாகம், பயணம், அறிவிப்பு, சேவை, நேரம்

மேலும், அனைத்து முனையங்களிலிருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 11 மணிக்கு பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களிலிருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ இரயில் சேவை காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும்.

எனவே, 2023 ஜனவரி 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|
|