Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள் இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கம்

9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள் இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கம்

By: vaithegi Mon, 27 Nov 2023 11:42:19 AM

9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள் இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கம்

சென்னை : இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கம் .... சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

"சென்னை மெட்ரோ ரயில்களில் அலுவலக நேரம் அல்லாத மற்ற நேரங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, மழை காலம் தொடங்கி உள்ளதால், போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்ய மெட்ரோ ரயில்களில் மக்கள் அதிகளவில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.

metro trains,passengers ,மெட்ரோ ரயில்கள் ,பயணிகள்


எனவே, நெரிசல் மிகு நேரம் அல்லாத மற்ற நேரங்களிலும் மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டு 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கி வசதி மற்றும் இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :