Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மெட்ரோ பணி .. போக்குவரத்து மாற்றம் மேலும் நீட்டிப்பு

சென்னையில் மெட்ரோ பணி .. போக்குவரத்து மாற்றம் மேலும் நீட்டிப்பு

By: vaithegi Tue, 14 Feb 2023 3:25:05 PM

சென்னையில் மெட்ரோ பணி ..  போக்குவரத்து மாற்றம் மேலும் நீட்டிப்பு

எனவே அதன்படி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் டி.டி.கே., சாலையை நோக்கி வழக்கம் போல் செல்லலாம் என்றும், ஆனால் டி.டி.கே., சாலை சந்திப்பிலிருந்து ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் சிக்னல் சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று அடையாறு போட் கிளப் கேட் சாலை, முதல் அவென்யூ போட் கிளப் சாலை, போட் கிளப் சாலை போன்ற சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சேமியர்ஸ் சாலையிலிருந்து போட் கிளப் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை எனவும் இந்த வழியில் செல்ல விரும்பும் வாகனங்கள் அடையாறு போட் கிளப் கேட் சாலை வழியாக செல்லலாம்.

இதை தொடர்ந்து, ஏ.பி.எம். அவென்யூ, டர்ன்புல்ஸ் விரிவாக்கம் போன்ற சாலைகள் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அடையார் கேட் கிளப் சாலையிலிருந்து கொடூட்புரம் மேம்பாலத்தை நோக்கி செல்லலாம். இதே போல ஜி.கே.மூப்பனார் மேம்பால சர்வீஸ் சாலையிலிருந்து டர்ன்புல்ஸ் விரிவாக்கம் நோக்கி செல்ல தடை என்பதால் ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் சிக்னல் சந்திப்பிலி ருந்து நேராக சேமியர்ஸ் சாலையில் வாகன ஓட்டிகள் செல்லலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :