Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மெரினா கடற்கரையில் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிடல்

சென்னை மெரினா கடற்கரையில் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிடல்

By: vaithegi Sun, 03 July 2022 3:48:48 PM

சென்னை  மெரினா கடற்கரையில் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிடல்

சென்னை: எழில் கொஞ்சும் மெரினா கடற்கரையை ஆகாயத்தில் சென்றவாறே பார்த்து ரசிக்கும் வகையில் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதன் முதல் கட்டமாக நேப்பியர் பாலத்தில் இருந்து 'நம்ம சென்னை' செல்பி முனை வரையிலான 3 கி.மீ. தூரத்துக்கு 'ரோப் கார்' வசதி கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது. அதேமாதிரி நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரெயில் நிலையம் வரையிலும் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

chennai corporation,marina ,சென்னை மாநகராட்சி,மெரினா

மேலும், மெரினா கடற்கரையை தொடர்ந்து, அடையாறு ஆற்றை ஒட்டிச் செல்லும் வகையிலும், பாரம்பரிய கட்டிடங்களை ஒட்டிச் செல்லும் வகையிலும் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்துவது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான புதிய திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளுக்கு தமிழக அரசு விரைவில் நிர்வாக அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :