Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு...மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக குறைந்தது

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு...மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக குறைந்தது

By: Monisha Fri, 03 July 2020 09:36:08 AM

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு...மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக குறைந்தது

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அன்று காலையில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர், இரவில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று மாலை வரை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு நேற்று மாலை முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 12-ந் தேதி திறந்து விடப்பட்ட இந்த தண்ணீர் 16-ந் தேதி கல்லணை வழியாக, காவிரி டெல்டா மாவட்ட சாகுபடிக்கு திறந்துவிடப்பட்டது. அங்கிருந்து காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் அருகே உள்ள நூலாறு தடுப்பணைக்கு நேற்று காலை காவிரி தண்ணீர் வந்து சேர்ந்தது.

irrigation,mettur dam,delta,watershed,cultivation ,பாசனம்,மேட்டூர் அணை,டெல்டா,நீர்மட்டம்,சாகுபடி

காரைக்கால் மாவட்ட குறுவை சாகுபடிக்காக தடுப்பணையில் இருந்து அமைச்சர் கமலக்கண்ணன் தண்ணீரை திறந்துவிட்டார். காவிரி தண்ணீர் காரைக்காலுக்கு வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 938 கனஅடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது.

Tags :
|