Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணையில் படிப்படியாக குறைய தொடங்கிய நீர்மட்டம்!

மேட்டூர் அணையில் படிப்படியாக குறைய தொடங்கிய நீர்மட்டம்!

By: Monisha Wed, 17 June 2020 10:53:50 AM

மேட்டூர் அணையில் படிப்படியாக குறைய தொடங்கிய நீர்மட்டம்!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனதிற்காக கடந்த 12-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, நீர் இருப்பு போதிய அளவில் இல்லாததால் அணையில் இருந்து குறித்த நாளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. 2 மாதம் தாமதமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது.

அதே நேரத்தில் பருவமழை காரணமாக கடந்த ஆண்டு மேட்டூர் அணை அடுத்தடுத்து 4 முறை நிரம்பியது. மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி முதல் நேற்று முன்தினம் (ஜூன் மாதம் 15-ந் தேதி) வரை தொடர்ந்து 308 நாட்களுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் குறையாமல் இருந்தது.

mettur dam,irrigation,cauvery delta,water discharge,cultivation ,மேட்டூர் அணை,பாசனம்,காவிரி டெல்டா,நீர்மட்டம்,சாகுபடி

அணையில் போதிய நீர் இருப்பு காரணமாக இந்த ஆண்டு கடந்த 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வழக்கம் போல் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக அணையில் நீர் இருப்பு கடந்த 4 நாட்களாக படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்து 99.64 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 210 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

Tags :