Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது...அணையின் நீர்மட்டம் 94.92 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது...அணையின் நீர்மட்டம் 94.92 அடியாக நீடிப்பு

By: Monisha Thu, 27 Aug 2020 12:45:50 PM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது...அணையின் நீர்மட்டம் 94.92 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,204 கன அடியில் இருந்து 4,665 கன அடியாக குறைந்துள்ளது.

வட கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்கள் முன்பு கடுமையாக கொட்டி தீர்த்தது. இதையடுத்து, அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின.

இதை தொடர்ந்து இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வந்தது.

mettur dam,rain,irrigation,delta,irrigation ,மேட்டூர் அணை,மழை,நீர்வரத்து,டெல்டா,பாசனம்

பின்னர் மழை குறைந்ததையடுத்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,204 கன அடியில் இருந்து 4,665 கன அடியாக குறைந்துள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 94.92 அடியாகவும், நீர்இருப்பு 58.45 டி.எம்.சி.யாகவும் உள்ளது, டெல்டா பாசனத் தேவைக்காக காவிரியில் 18,000 கனஅடி, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|