Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 3 ஆயிரத்து 369 கன அடியாக இருந்தது இன்று 2 ஆயிரத்து 593 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 3 ஆயிரத்து 369 கன அடியாக இருந்தது இன்று 2 ஆயிரத்து 593 கன அடியாக சரிவு

By: vaithegi Tue, 28 June 2022 10:17:36 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 3 ஆயிரத்து 369 கன அடியாக இருந்தது  இன்று 2 ஆயிரத்து 593 கன அடியாக சரிவு

மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 3 ஆயிரத்து 500 கன அடியாக சரிந்தது.

ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 369 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 593 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

mettur dam,cubic feet ,மேட்டூர் அணை,கன அடி

மேலும், அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்த விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மிக வேகமாக சரிந்து வருகிறது.

இதனால், நேற்று 106.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 106 அடியானது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது என்பது குய்ப்பிடத்தக்கது.

Tags :