Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 27-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 27-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்

By: vaithegi Wed, 25 Jan 2023 3:27:22 PM

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 27-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்

சென்னை: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 27-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது அதற்கடுத்த 3 தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: 25.01.2023 முதல் 27.01.2023 வரை: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

low pressure area,bay of bengal ,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,வங்கக்கடல்

இதனை அடுத்து 28.01.2023: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவித்துள்ளது.

29.01.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :