Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணை .. நேற்று காலை வினாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர் அணை .. நேற்று காலை வினாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக சரிவு

By: vaithegi Tue, 16 Aug 2022 11:11:39 AM

மேட்டூர் அணை ..   நேற்று காலை வினாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர் : கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

எனவே இதனால் 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 90 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 75 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

இதனை அடுத்து ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

mettur dam,water supply ,மேட்டூர் அணை,நீர்வரத்து

மேலும் அணையில் இருந்து 65 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், 400 கன அடி தண்ணீர் கால்வாயிலும் என்று மொத்தம் 65 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு கொண்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.

இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காவிரியில் தொடர்ந்து கரை புரண்டு ஓடுகிறது.

Tags :