Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3-வது முறையாக எட்டியுள்ளது

மேட்டூர அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3-வது முறையாக எட்டியுள்ளது

By: vaithegi Thu, 08 Dec 2022 10:42:16 AM

மேட்டூர அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3-வது முறையாக எட்டியுள்ளது

மேட்டூர : காவிரிடெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்துசராசரியாக 9 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்த நிலையில் மேட்டூர அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3-வது முறையாக எட்டியது.

கடந்த ஜூலை மாதம்16ஆம் தேதி மேட்டூர் அணை,அணையின் வரலாற்றில்42வது முறையாக நிரம்பியது. 3 மாதத்திற்கு பிறகு நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவைஅக்டோபர் 12-ந்தேதிஎட்டியது.

metura dam,full capacity ,மேட்டூர அணை ,முழு கொள்ளளவு

இதற்கு இடையே மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இதையடுத்து இந்த நிலையில் நடப்பாண்டில் 3-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதுமாக அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது.

Tags :