Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் ராணுவ உடையில் வந்த போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 12 பேர் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் ராணுவ உடையில் வந்த போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 12 பேர் சுட்டுக்கொலை

By: Karunakaran Sun, 05 July 2020 10:29:05 AM

மெக்சிகோவில் ராணுவ உடையில் வந்த போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 12 பேர் சுட்டுக்கொலை

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. மெக்சிகோவிலும், எல்லை வழியாக அமெரிக்காவிற்கும் இந்த போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது. இதனை தடுக்க அமெரிக்க எல்லையில் மெக்சிகோ ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில சமயங்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதனால், இரு தரப்பிலும் பலர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்துடன் எல்லையை பகிரும் மெக்சிகோவின் தமுயுல்பாஸ் மாகாணம் நூவா லியோன் என்ற பகுதியில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

mexico,drug addicts,shot dead,mexico militants ,மெக்ஸிகோ, போதைக்கு அடிமை, சுட்டுக் கொலை, போதைப்பொருள் கும்பல்

அப்போது ராணுவ உடையில் ஆயுதங்களுடன் கார்களில் போதைப்பொருள் கும்பல் வந்தது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களை குறிவைத்து அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ராணுவ வீரர்கள் அதிரடியாக எதிர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 12 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரை ராணுவ வீரர்கள் தீக்கிரையாக்கினர். அதன்பின், போதைப்பொருள் கும்பலிடம் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.

Tags :
|