Advertisement

மெக்சிகோ எல்லை திறக்கப்படாது... அமெரிக்கா திட்டவட்டம்

By: Nagaraj Sat, 06 May 2023 8:41:29 PM

மெக்சிகோ எல்லை திறக்கப்படாது... அமெரிக்கா திட்டவட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது.

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், பிடன் நிர்வாகம் பொறுப்பேற்ற 11 ஆம் தேதிக்குப் பிறகு இந்த விதிகளில் தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லை திறக்கப்பட்டால், எண்ணற்ற புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவுக்குள் நுழையலாம். இதனால், நியூ மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த விவகாரம் பைடன் நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் கூறும்போது, எல்லை வழியே ஏற்கனவே லத்தீன் அமெரிக்கர்கள் அலைகடல் போன்று திரண்டு வருகின்றனர் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

assurance,border,government,mexico,united states, ,அமெரிக்கா, அரசு, உறுதி, எல்லை, மெக்சிகோ

இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அலெஜான்ட்ரோ மயோர்கஸ், டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிரவுன்ஸ்வில்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நமது சட்டங்கள், தேவைப்படும் நபர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறுகிறார். இந்த எல்லை திறக்கப்படவில்லை. மே 11ஆம் தேதிக்குப் பிறகு திறக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார். தகுதியுள்ள நபர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான பாதுகாப்பான மற்றும் சட்ட ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

தெற்கு எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குடிமக்களின் பாதுகாப்பு, காவல்துறை அதிகாரிகளின் நலன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கருத்தில் கொண்டு மெக்சிகோ எல்லை திறக்கப்படாது என்ற முடிவை அமெரிக்க அதிபர் பிடன் அரசு எடுத்துள்ளது.

Tags :
|
|