Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா உயிர்ப்பலியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய மெக்சிகோ

கொரோனா உயிர்ப்பலியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய மெக்சிகோ

By: Karunakaran Sun, 02 Aug 2020 3:01:29 PM

கொரோனா உயிர்ப்பலியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய மெக்சிகோ

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. கொரோனாவால் உலகளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காதான், கொரோனா உயிர்ப்பலி எண்ணியிலும் முதல் இடத்தில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் புள்ளிவிவரப்படி, அமெரிக்காவில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 826 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில் 92 ஆயிரத்து 568 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போது மூன்றாம் இடத்தில் இருந்த இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, மெக்சிகோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

mexico,england,corona death toll,corona prevalence ,மெக்ஸிகோ, இங்கிலாந்து, கொரோனா இறப்பு எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு

மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்து 688 ஆக உள்ளது.மெக்சிகோ சிட்டியில் கடந்த ஜூன் மாதம் மத்தியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு திரும்பினர். அத்தியாவசியமற்ற சில வணிகங்கள் கடந்த மாத தொடக்கத்தில் அங்கு மீண்டும் திறக்கபட்டன. மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 637 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்து 688 ஆகவும் உள்ளது.

கொரோனா வைரஸ் உயிர்ப்பலியே இன்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக வியட்னாம் உலக அரங்கில் பாராட்டைப்பெற்றது. ஆனால் தற்போது அங்கு முதன்முதலாக கடந்த வெள்ளிக்கிழமையன்று 70 வயதான ஒருவரும், அவரைத் தொடர்ந்து 61 வயதான மற்றொருவரும் கொரோனாவுக்கு பலியாகினர். வியட்னாமில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 558, பலியானவர்கள் எண்ணிக்கை 3 என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|