Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியாவுக்கு புறப்பட்ட மைக்கேல் பாம்பியோ

மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியாவுக்கு புறப்பட்ட மைக்கேல் பாம்பியோ

By: Karunakaran Mon, 26 Oct 2020 12:43:26 PM

மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியாவுக்கு புறப்பட்ட மைக்கேல் பாம்பியோ

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக மைக்கேல் பாம்பியோ இருந்து வருகிறார். இந்நிலையியல் அவர் புதுடெல்லியில் நடைபெறவுள்ள மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணம் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், அவர் இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்ய இருக்கிறார். இந்த பயணத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அச்சுறுத்தல்களை முறியடிக்க சுதந்திர நாடுகள் எப்படி இணைந்து பணியாற்ற முடியும் என்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

michael pompeo,india,ministerial level talks,america ,மைக்கேல் பாம்பியோ, இந்தியா, மந்திரி மட்ட பேச்சுவார்த்தை, அமெரிக்கா

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரது இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே பயங்கர மோதல் நிலவி வருகிறது. மேலும் சீனா - இந்தியா இடையே எல்லை பகுதியில் பிரச்சனை நிலவி வருகிறது.

இருநாடுகளுக்கும் சீனா பிரச்சனையாக மாறியுள்ளதால், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். லடாக் பகுதியில் இந்தியா-சீனா இடையே போர் மூளாமல் இருக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. மேலும் லடாக்கில் சீனாவின் செயல்பாடுகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|