Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு?

மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு?

By: Nagaraj Fri, 20 Jan 2023 10:26:26 AM

மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு?

நியூயார்க்: கூகுள், அமேசான், டிவிட்டர் நிறுவனங்களை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது உலகளாவிய ஊழியர்களில் இருந்து அதிக பதவிகளை குறைக்க தயாராகி வருவதாக வெளியாகியுள்ளது. விரைவில் அது குறித்த அறிவிப்புகள் வெளிவரலாம். 2023ம் ஆண்டு தொடங்கியது முதல் மோசமான பொருளாதார நிலைமைகளில் இருந்து தப்பிக்க மிகப்பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

அமேசான் நிறுவனம் பொருளாதார சிக்கல் காரணமாக 18,000 க்கும் அதிகமானவர்களை பணி நீக்கம் செய்வதாக இந்த மாதம் அறிவித்திருந்தது. இந்திய நிறுவனங்களும் தொடர்ந்து பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன. ஷேர்சாட் மற்றும் மோஜ் ஆகிய செயலிகளை நடத்திவரும் இந்திய நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் 20% பேரை பணிநீக்கம் செய்துள்ளது.

microsoft,employees,layoffs,average,information ,மைக்ரோசாப்ட், ஊழியர்கள், பணிநீக்கம், சராசரி, தகவல்

எந்த முன்னறிவிப்பும் இன்றி திங்கள் கிழமை காலை வந்த இமெயிலால் பணியாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். போன வருட இறுதியிலும் Ver se, BYJU’S, Chargebee, Cars24, LEAD, Ola, OYO, Meesho, MPL போன்ற நிறைய ஸ்டார்டப் கம்பெனிகள் பணி நீக்கம் குறித்து அறிவித்தன.


கொரோனா காலத்தில் கிடைத்த நிதியில் அவர்கள் நிறைய பணியாளர்களை தேவைக்கு அதிகமாக பணி அமர்த்தி அதனை சரியாக செயல்படுத்தாமல் ஏற்பட்ட நஷ்டங்களை சரிசெய்ய இப்போது பணியாளர்களை நீக்கி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் 2023ம் ஆண்டின் ஜனவரியில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 1600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 1,54,336 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலை நீடித்தால் 2023ம் ஆண்டின் இறுதிக்குள் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்று நினைத்து பார்த்தால் பதைபதைக்கிறது.

Tags :