Advertisement

மகாராஷ்டிராவில் நள்ளிரவு திடீரென நிலநடுக்கம்

By: Karunakaran Mon, 20 July 2020 11:41:09 AM

மகாராஷ்டிராவில் நள்ளிரவு திடீரென நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 11.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் அங்குள்ள மக்கள் அலறியடித்து கொண்டு பதற்றம் அடைந்து ஓடினர். இந்த நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

maharashtra,earthquake,shake,satara ,மகாராஷ்டிரா, பூகம்பம், குலுக்கல், சதாரா

இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா கொரோனா, மழை போன்றவற்றால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மழை காரணமாக கட்டிடங்கள் விழுந்து சிலர் உயிரிழந்தனர். கொரோனா காரணமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மேலும் அங்கு பல இயற்கை பேரிடர்களால் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

Tags :
|