Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிர்ச்சி தகவல் வெளியானது... அமெரிக்காவில் ஜுன் மாதம் முதல் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்களாம்

அதிர்ச்சி தகவல் வெளியானது... அமெரிக்காவில் ஜுன் மாதம் முதல் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்களாம்

By: Nagaraj Wed, 06 May 2020 8:51:37 PM

அதிர்ச்சி தகவல் வெளியானது... அமெரிக்காவில் ஜுன் மாதம் முதல் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்களாம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் கொரோனா வைரசால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்று வெளியாகி உள்ள புதிய கணிப்பு வெளியாகி மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது.

வல்லரசு அமெரிக்கா, கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. பிற நாடுகளை விட அதிக பாதிப்பை தினமும் சந்தித்து வருகிறது. கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலி வேகமாக 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

corona,june month,trauma information,number of victims,tamil news,coronavirus news ,கொரோனா, ஜுன் மாதம், அதிர்ச்சி தகவல், பலியாவோர் எண்ணிக்கை

அங்கு ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை பல மாகாணங்களும் திறந்து விடுகின்றன. ஜார்ஜியா, மிசிசிப்பி, டென்னிசி, டெக்சாஸ், இல்லினாய்ஸ், அலாஸ்கா, அரிசோனா, ஆர்கன்சாஸ், கொலரோடோ, புளோரிடா, கன்சாஸ், மின்னசோட்டா, மிசவுரி, மோண்டனா, நெப்ராஸ்கா, நியுஹம்ப்ஷயர், ஓஹியோ, தெற்கு கரோலினா, வெர்மாண்ட், மேற்கு வெர்ஜீனியா ஆகியவை கட்டுப்பாடுகளை நீக்கிய மாகாணங்கள் ஆகும்.
இந்த நிலையில் அங்கு உள்நாட்டு வரைவு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில், வரும் ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் கொரோனா வைரஸ் தாக்கி தினமும் 3 ஆயிரம் பேர் இறப்பார்கள் என கணித்து சொல்லப்பட்டுள்ளது.

corona,june month,trauma information,number of victims,tamil news,coronavirus news ,கொரோனா, ஜுன் மாதம், அதிர்ச்சி தகவல், பலியாவோர் எண்ணிக்கை

மேலும், தினசரி சுமார் 2 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவார்கள் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றன.

Tags :
|