Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப ரெயில்கள் மற்றும் பேருந்துகள் தயார் - மராட்டிய முதல் மந்திரி

புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப ரெயில்கள் மற்றும் பேருந்துகள் தயார் - மராட்டிய முதல் மந்திரி

By: Monisha Tue, 19 May 2020 09:30:07 AM

புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப ரெயில்கள் மற்றும் பேருந்துகள் தயார் - மராட்டிய முதல் மந்திரி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக பணி செய்து வருகின்றனர். எனினும் நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் அதிகபட்சமாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்து 53 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்து உள்ளது. 7 ஆயிரத்து 688 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தநிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் மராட்டியத்திற்கு திரும்பும் முனைப்பில் உள்ளனர். இதுகுறித்து மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இன்று கூறியதாவது:-

uthav thackeray,migrant workers,corona virus,trains,buses ,உத்தவ் தாக்கரே,புலம்பெயர் தொழிலாளர்கள்,கொரோனா பாதிப்பு,ரெயில்கள்,பேருந்துகள்

இதுவரை மும்பையில் 19 ஆயிரத்து 967 கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆயிரம் பேர் குணமடைந்து சென்று விட்டனர். நாங்கள் 5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் ஊர் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். அவர்களுக்காக ரெயில்கள் மற்றும் பேருந்துகளை தயார்படுத்தி வைத்துள்ளோம்.

அதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊருக்கு நடந்து வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறியுள்ளார்.

Tags :
|