Advertisement

கேரளாவில் மிலாது நபி பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்

By: vaithegi Tue, 26 Sept 2023 4:30:56 PM

கேரளாவில் மிலாது நபி பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்

கேரளா: பொதுவிடுமுறை செப். 27ல் இருந்து செப். 28 ஆம் தேதிக்கு மாற்றம் ... நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான மிலாது நபி பண்டிகை வருகிற செப். 28 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய மக்கள் இப்பண்டிகைக்கு எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதையடுத்து பிறை தெரியும் நாள் தான் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும். அந்த வகையில் முன்னதாக கேரளாவில் மிலாது நபி பண்டிகை வரும் செப். 27 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

holiday,miladu nabi festival,kerala ,விடுமுறை ,மிலாது நபி பண்டிகை,கேரளா

ஆனால் தற்போது அதை மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வரும் செப். 27 ஆம் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படும் எனவும் அன்றைய தினம் பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது வரும் செப். 28 ஆம் தேதிக்கு பொதுவிடுமுறை மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. மேலும் இது குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.

Tags :