Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கோவில் மாகாண முன்னாள் துணைத்தலைவர் சென்ற வாகனத்தை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

காங்கோவில் மாகாண முன்னாள் துணைத்தலைவர் சென்ற வாகனத்தை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

By: Karunakaran Mon, 06 July 2020 09:26:10 AM

காங்கோவில் மாகாண முன்னாள் துணைத்தலைவர் சென்ற வாகனத்தை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

மத்திய ஆப்பிரிக்க நாடாக உள்ள காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் தாக்குதலால் அங்கு பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது, அந்நாட்டின் இட்டுரி மாகாணம் டிஜுஜு நகரின் மடிடி கிராமத்தில் உள்ள சாலையில் இரண்டு கார் சென்று கொண்டிருந்தது. இதில் இட்டுரி மாகாண முன்னாள் துணைத்தலைவர், போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட பலர் பயணம் மேற்கொண்டனர்.

militants attack,congo,former provincial vice president,congolese ,போராளிகள் தாக்குதல், காங்கோ, முன்னாள் மாகாண துணைத் தலைவர், வாகனம்

மடிடி கிராமத்தின் காட்டுப்பகுதியை கடந்து அவர்கள் சென்றபோது, அங்கு மறைந்திருந்த கிளர்ச்சியாளர்கள் வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிசூடு தாக்குதல் நடைபெற்றபோது, 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் நடந்த உயிரிழப்புகளில் மாகாண துணைத்தலைவரும் அடங்குவார். அவருடன் 4 ராணுவ வீரர்கள், 3 போலீசாரும் உயிரிழந்தனர். மாகாண முன்னாள் துணைத்தலைவரை கிளர்ச்சியாளர்கள் சுட்டு கொன்ற சம்பவத்தால் அங்கு அரசு படையினர் விரைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
|