Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நைஜரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை?

நைஜரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை?

By: Nagaraj Sun, 06 Aug 2023 7:09:36 PM

நைஜரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை?

நைஜீரியா: ராணுவ நடவடிக்கை... நைஜரில் மக்களால் தோந்தெடுக்கப்பட்ட அதிபரிடம் ஆட்சியை ஒப்படைக்க கிளா்ச்சியாளா்களுக்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் விதித்துள்ள கெடு நெருங்குவதையடுத்து, அவா்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அந்த நாடுகள் தயாராகி வருகின்றன.

இது குறித்து 'தி காா்டியன்' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: ராணுவத்தின் ஒரு பிரிவினரால் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள அதிபா் முகமது பஸூமிடம் ஆட்சியதிகாரத்தை கிளா்ச்சியாளம் ஒப்படைக்க வேண்டும் என்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான எகோவாஸ் வலியுறுத்தியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஆக. 6) அந்த நடவடிக்கையை கிளா்ச்சியாளா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு கெடு விதித்துள்ளது.அந்த கெடு நெருங்கி வரும் நிலையிலும், ஆட்சிப் பொறுப்பை அதிபா் முகமது பஸூமிடம் கிளா்ச்சியாளா்கள் ஒப்படைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

இந்தச் சூழலில், ஏற்கெனவே அறிவித்திருந்ததைப் போல நைஜரில் கிளா்ச்சியாளா்கள் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு எகோவாஸ் கூட்டமைப்பு நாடுகள் தயாராகி வருகின்றன. இதற்காக, உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை தலைவா்கள் கிளா்ச்சியாளா்கள் மீதான தாக்குதல் திட்டத்தையையும் உருவாக்கியுள்ளனா் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

international nations,condemnation,security forces,rebels,nigeria ,சர்வதேச நாடுகள், கண்டனம், பாதுகாப்பு படையினர், கிளர்ச்சியாளர்கள், நைஜீரியா

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜா், பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து கடந்த 1960-ஆம் ஆண்டு விடுதலை பெற்றதிலிருந்து அங்கு ராணுவ ஆட்சியும், ஜனநாயக முறையில் தோந்தெடுக்கப்பட்ட தலைவா்களின் ஆட்சியும் மாறி மாறி நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தேர்தலில் முகமது பஸூம் வெற்றி பெற்று நாட்டின் 10-ஆவது அதிபராக அவா் 2021 ஏப்ரல் 2-ஆம் தேதி பதவியேற்றாா்.நைஜரில் அமைதியான முறையில் நடைபெற்ற முதல் ஆட்சி மாற்றம் அது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு இரு நாள்களுக்கு முன்னதாக ராணுவத்தின் ஒரு பிரிவினா் கிளா்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனா்.

அதனை முறியடித்த பாதுகாப்புப் படையினா், கிளா்ச்சியாளா்கள் சிலரைக் கைது செய்தனா். இந்த நிலையில், முகமது பஸூமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக ராணுவத்தின் ஒரு பிரிவினா் கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிவித்தனா். பஸூமின் பாதுகாவலா்களே அவரை சிறைப்பிடித்தனா்.இந்த ராணுவக் கிளா்ச்சியை முன்னின்று நடத்திய தளபதி அப்தூரஹ்மேன் சியானி நாட்டின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டாா்.

இதற்கு, ஐ.நா., ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்ளிட்ட அமைப்புகளும் சா்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Tags :
|