Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவ பயிற்சிகள் நிஜப் போர் போன்று இருக்க வேண்டும்; சீன அதிபர் உத்தரவு

ராணுவ பயிற்சிகள் நிஜப் போர் போன்று இருக்க வேண்டும்; சீன அதிபர் உத்தரவு

By: Nagaraj Thu, 26 Nov 2020 9:02:42 PM

ராணுவ பயிற்சிகள் நிஜப் போர் போன்று இருக்க வேண்டும்; சீன அதிபர் உத்தரவு

நிஜ போர் போன்று பயிற்சி... மத்திய ராணுவ ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜிங்பிங், ராணுவ பயிற்சிகள் நிஜ போரை போன்று இருக்க வேண்டும். எப்போதும் தயார் நிலை தேவை என உத்தரவிட்டுள்ளார்.

சீனாவின் மத்திய ராணுவ ஆணையம் என்பது 20 லட்சம் வீரர்களை கொண்ட ராணுவத்தின் தலைமை அமைப்பாகும். இதன் தலைவராக அதிபரே உள்ளார். நேற்று (நவ.,25) அவ்வமைப்பின் கூட்டத்தில் ஜி ஜிங்பிங் பங்கேற்றார். உண்மையான போர் நிலைமையை மையமாக கொண்டு பயிற்சிகள் அமைக்கப்பட வேண்டும். போர்களை வெல்லும் திறனை அதிகரிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி, தங்கள் நாட்டு ராணுவத்தை 2027-்க்குள் அமெரிக்க ராணுவத்துக்கு இணையானதாக மாற்ற திட்டமிட்டுள்ளது. சீனா இந்தியா இடையே கிழக்கு லடாக்கில் கடந்த 6 மாதமாக மோதல் ஏற்பட்டுள்ள சூழலில் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் அதிபர் ஜி ஜிங்பிங் பேசியதாவது:

defense environment,war situation,modern warfare methods,training ,பாதுகாப்பு சூழல், போர் நிலைமை, நவீன போர் முறைகள், பயிற்சி

புதிய வகை ராணுவ பயிற்சி முறையை விரைவாக செயல்படுத்த வேண்டும். புதிய சகாப்தத்திற்கு ஏற்ப வலுவான ஆயுதப் படைகளை உருவாக்க வேண்டும். அவை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். கட்சியின் இந்த இலக்கிற்கு வலுவான ஒத்துழைப்பு தேவை.

ராணுவப் பயிற்சி என்பது ராணுவத்தின் வழக்கமான பணிகளின் மையப்புள்ளி. பயிற்சியே போர் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறை. ராணுவம் தயார் நிலையில் இருப்பதற்கான நேரடி வடிவம் அது.எனவே பயிற்சியானது உண்மையான போர் போன்றே இருக்க வேண்டும். அதற்கான சிறந்த செயல்திட்டங்கள், உயர் மட்ட அமைப்புகள் தேவை.

நாட்டின் பாதுகாப்பு சூழல், போர் நிலைமை, நவீன போர் முறைகள், பயிற்சி போன்றவற்றில் புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கேற்ப அதிகாரிகள் மற்றும் வீரர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியறிவை உயர்த்த வேண்டும். பயிற்சியில் புதிய ஆயுதங்களை பயன்படுத்த முயற்சியுங்கள். இவ்வாறு பேசினார்.

Tags :