Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தி , விற்பனை நிறுத்தம் தொடர்பாக முதல்வருக்கு பால் முகவர்கள் நலச்சங்கம் கோரிக்கை

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தி , விற்பனை நிறுத்தம் தொடர்பாக முதல்வருக்கு பால் முகவர்கள் நலச்சங்கம் கோரிக்கை

By: vaithegi Wed, 22 Nov 2023 12:22:24 PM

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தி , விற்பனை நிறுத்தம் தொடர்பாக முதல்வருக்கு பால் முகவர்கள் நலச்சங்கம் கோரிக்கை


சென்னை: ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை வரும்நவ.25 முதல் நிறுத்தப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு பால் முகவர்கள்தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமைச் செயலகத்தில், முதல்வர் தனிப்பிரிவில் மனு ஒன்றை அளித்தார்.

இதையடுத்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆவினிலிருந்து, மஜந்தா, நீலம், பச்சை, ஆரஞ்சு நிறபாக்கெட்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசாணை ஏதுமின்றி 3.5 சதவீதம் கொழுப்பு, 8.5 சதவீதம் திடச்சத்து பாலை பசும்பால் என கூறி சந்தைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, அந்த மாவட்டங்களில், ஆவின் டிலைட் என்ற பெயரில், பெயரை மற்றி, எப்எஸ்எஸ்ஏஐ வழிகாட்டுதல் மற்றும் விதிகளுக்கு முரணாக ‘டோண்டு மில்க்’ என்று குறிப்பிட்டு சந்தைப்படுத்தி அரசு விதிகளை ஆவின் மீறி உள்ளது.

milk agents association,manufacturing,sales,aavin green packet , பால் முகவர்கள் நலச்சங்கம் , உற்பத்தி , விற்பனை,ஆவின் பச்சை நிற பாக்கெட்

மேலும், ஆவினால் விற்கப்படும் பாலில் பச்சை நிற பக்கெட்டைதான் அதிகளவில் பொதுமக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். அந்த வகை பாலின் விற்பனை தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட நிலையில், சென்னையில் வரும் நவ.25 முதல் நிறுத்தப்படும், மாதாந்திர அட்டைதாரர்களுகு டிச.1 முதல் நிறுத்தப்படும் என்றும் அதற்கு பதில் ஒரு சதவீதம் கொழுப்பு சத்து குறைவான ஆவின்டிலைட் பாலை அதே விலையில் விற்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவதாக உள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று தமிழக முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றதும், ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3 குறைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த விலை குறைப்பு உடனடியாக அமல்படுத்தப்பட்ட நிலையில்,அந்த அரசாணைக்கு மாறாக தற்போது பச்சை நிற பால் நிறுத்தப்படவுள்ளது. ஆவின் அதிகாரிகளின் இந்தசெயல்பாடுகள் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படகாரணமாக அமைந்துவிடும். மேலும் இதுதவிர பொதுமக்கள் தனியார் பால்நிறுவனங்களை நோக்கி செல்லவும்வாய்ப்பாக அமைந்துவிடும்.

எனவே, இதற்கு காரணமான ஆவின் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, 4.5 சதவீதம் கொழுப்பு உள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தாமல், வழக்கம்போன்று தொடர ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags :
|