Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By: Nagaraj Thu, 29 June 2023 7:02:09 PM

கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்... கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 315 ரூபாயாக உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், அரசின் இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் 5 கோடி கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிட்ட 5 லட்சம் பேரும் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கொள்முதல் தொகை பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அனுராக் தாக்குர் குறிப்பிடுள்ளார்.

mantavia,food security,sugarcane,procurement,price,production ,மாண்டவியா, உணவு பாதுகாப்பு, கரும்பு, கொள்முதல், விலை, உற்பத்தி

அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மண்ணின் உற்பத்தித்திறனை புதுப்பிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அந்த நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார். 2025-26ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 8 நானோ யூரியா ஆலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் மாண்டவியா கூறியுள்ளார்.

Tags :
|