Advertisement

ஒன்ராறியோவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு அமலானது

By: Nagaraj Sat, 01 Oct 2022 9:54:18 PM

ஒன்ராறியோவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு அமலானது

கனடா: ஒன்ராறியோவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி பொதுவான குறைந்தபட்ச ஊதியமானது மணிக்கு 15.50 கனேடிய டொலர் என்பது அமுலுக்கு வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஃபோர்ட் அரசாங்கம் அறிவித்துள்ளதற்கு ஏற்ப, 15 டொலர் என இருந்த ஊதியம் தற்போது 15.50 டொலர் என அதிகரிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பணியமர்த்தப்பட்டால், அவர்களுக்கு இனி மணிக்கு 14.60 டொலர் என உறுதியாகியுள்ளது.

wages,government,price rise,increased,jan ,ஊதியம், அரசாங்கம், விலைவாசி உயர்வு, அதிகரிக்கப்பட்டுள்ளது, ஜனவரி

வீடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மணிக்கு 17.05 டொலர் ஊதியம் கிடைக்கவிருக்கிறது. டக் ஃபோர்ட் அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் குறைந்தபட்ச ஊதியமாக 15 டொலர் என அறிவித்தது.

தற்போது மீண்டும் அதில் குறைந்தது 50-cent அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வு காரணமாகவே குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|