Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்து வர்த்தக மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா தொற்று இல்லை

இங்கிலாந்து வர்த்தக மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா தொற்று இல்லை

By: Monisha Fri, 05 June 2020 12:05:14 PM

இங்கிலாந்து வர்த்தக மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா தொற்று இல்லை

இந்திய வம்சாவளியை சேர்ந்த அலோக் சர்மா (வயது 52), இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் வர்த்தக மந்திரியாக பதவி வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பெருநிறுவன திவால் மற்றும் ஆளுமை மசோதா மீதான விவாத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அடிக்கடி கைக்குட்டையால் தனது முகத்தை அவர் துடைத்துக்கொண்டார்.

அவர் உடல்நிலை சரியில்லை என்பதை உணர்ந்த எதிர்க்கட்சியான தொழில் கட்சியின் நிழல் வர்த்தக மந்திரி எட் மிலிபாண்ட், அவருக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வீட்டுக்கு திரும்பி தன்னை வீட்டில் சுய தனிமைப்படுத்திக்கொண்டார்.

uk,minister of commerce,alok sharma,coronavirus,negative ,இங்கிலாந்து,வர்த்தக மந்திரி,அலோக் சர்மா,கொரோனா தொற்று இல்லை

இந்நிலையில் அலோக்க சர்மாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் முதலில் இளவரசர் சார்லஸ் அடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மீண்டு வைந்துள்ளனர். இந்நிலையில் வர்த்தக மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடைபெற்றது நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|