Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த உறுதி..

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த உறுதி..

By: Monisha Fri, 15 July 2022 8:00:21 PM

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த உறுதி..

தமிழ்நாடு:அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து லேப்டாப் வழங்கப்படாததால் தமிழக அரசு இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டதா என்ற கேள்வி எழுந்தது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

minister,anbil mahesh,assured,lap top ,லேப்டாப்,அரசு.பள்ளி, ரத்து,

"அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்படவில்லை" என்று கூறினார். மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். ஆனால் தற்போதைய சூழலில், டேப்-ஐ விடவும் லேப்டாப் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆலோசித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


இரு நாட்களுக்கு முன் லேப்டாப்களில் அச்சிடப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை அகற்ற தமிழக அரசு உத்தரவிடப்பட்டிருந்தது.இதனால் இன்னும் சில மாதங்களுக்குள் மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :