Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் திருப்பி தரப்பட மாட்டாது அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் திருப்பி தரப்பட மாட்டாது அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

By: vaithegi Tue, 14 June 2022 3:47:53 PM

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் திருப்பி தரப்பட மாட்டாது  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகம்: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று (ஜூன் 13) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கல்வித்துறை மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது 1 -3 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு எழுத்துக்கள் மற்றும் கணித திறனை வளர்க்கும் நோக்கில்"எண்ணும் எழுத்தும் திட்டம்" கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வாசிப்பு திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் திட்டம் கொண்டு வரப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

education,schools,cell phone ,கல்வித்துறை , பள்ளிகள் , செல்போன்

இந்த நிலையில் பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி வகுப்பறைக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் செல்போன் திருப்பி தரப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அண்மை காலமாக பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வருவது அதிகமாக நடைபெற்று வந்து கொண்டு தான் இருக்கிறது. இது குறித்து பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வந்தாலும் அதையும் மீறி மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வந்து தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் செல்போனுக்கு தடை என்ற வாசகங்கள் எழுதி ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :