Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீடு

அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீடு

By: vaithegi Thu, 19 Jan 2023 3:54:20 PM

அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீடு

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TET தகுதித்தேர்வால் நிரப்பப்பட்டு கொண்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.

அதன் பிறகு கடந்த அக்டோபர் மாதம் TET முதல் தாள் தேர்வு நடைபெற்றது.அடுத்ததாக TET தாள் – 2 தேர்வு பிப்ரவரியில் நடத்தப்படும் எனவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை பூர்த்தி செய்ய 9,000 ஆசிரியர்கள் தேவை என தெரிவித்துள்ளார்.

anbil mahesh,government schools ,அன்பில் மகேஷ்,அரசு பள்ளிகள்

இதையடுத்து தற்போது பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாகவே ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர் என கூறினார்.

மேலும் திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்த பின் பேசிய அவர் முதற்கட்டமாக 500 பள்ளிகளில் மட்டும் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. வரும் நாட்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags :