Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்கள் ,ஆசிரியர்களை கொரோனாவிலிருந்து காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .. அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்கள் ,ஆசிரியர்களை கொரோனாவிலிருந்து காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .. அமைச்சர் அன்பில் மகேஷ்

By: vaithegi Wed, 28 Dec 2022 6:35:02 PM

மாணவர்கள் ,ஆசிரியர்களை கொரோனாவிலிருந்து காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது  ..  அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு உத்தரவிற்கு இணங்க தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதையடுத்து மக்கள் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து அண்மையில் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகைகளும் நடைபெற்றது. தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

corona,minister anbil mahesh ,கொரோனா,அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்பது பற்றி இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மாணவர்கள் முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார துறையின் கருத்தை கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொரோனா தொற்றிலிருந்து காக்க சுகாதாரத்துறை மற்றும் அரசின் அறிவுறுத்தல் படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Tags :
|