Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வை எண்ணி யாரும் அச்சப்பட வேண்டாம் ... அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட் தேர்வை எண்ணி யாரும் அச்சப்பட வேண்டாம் ... அமைச்சர் அன்பில் மகேஷ்

By: vaithegi Thu, 04 May 2023 4:38:47 PM

நீட் தேர்வை எண்ணி யாரும் அச்சப்பட வேண்டாம்   ...   அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: இந்தியாவின் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அறுக்கிற 7 -ம்தேதி அன்று நடைபெற உள்ளது.

இதையடுத்து இந்த தேர்வானது மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறும் என்றும் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.

anbil mahesh,entrance exam,neet ,அன்பில் மகேஷ்,நுழைவுத்தேர்வு ,நீட்

இந்நிலையில் தமிழகத்தில் மே-8ம் தேதி அதாவது நீட் தேர்வுக்கு முந்தைய நாள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே நீட் தேர்வு நடைபெறவுள்ளதால் மாணவர்கள் ஒரு வித அச்சத்தோடு தேர்வை எழுத வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதனை அடுத்து இது குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நீட் தேர்வை எண்ணி யாரும் அச்சப்பட வேண்டாம். மேலும் நீட் தேர்வு என்பது 12-ம் வகுப்பு தேர்வு போல மற்றொரு தேர்வு தான். வரவுள்ள நீட் தேர்வை எழுதும் போதும், முடிவுகள் வெளியாகும் போதும் மாணவர்கள் நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றிகரமான வாழ்க்கை அமையும் என அவர் வாழ்த்தி உள்ளார்.

Tags :