Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும் .. அமைச்சர் அன்பில்

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும் .. அமைச்சர் அன்பில்

By: vaithegi Tue, 07 Mar 2023 6:37:38 PM

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும்  ..  அமைச்சர் அன்பில்


சென்னை: பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு மூலமாக நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. இதற்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் விளக்கம் ... தமிழக முதல்வர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டபோது, அங்கு செயல்படும் மாதிரிப் பள்ளிகள் போன்று தமிழகத்திலும் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

எனவே அதன்படி அரசுப் பள்ளிகளில் சிறப்பாக பயிலும் மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து மாதிரி பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.மேலும் இந்த மாணவர்களுக்கு நீட், JEE போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

anbil mahesh,schools ,அன்பில் மகேஷ் ,பள்ளிகள்

மேலும் அத்துடன் இந்த மாதிரி பள்ளிகளில் நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருந்தது. இதற்கான நுழைவுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படாது என்றும் இது பற்றி பள்ளிக்கல்வித்துறைக்கு தவறான சுற்றறிக்கை பகிரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

Tags :