Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடரும் என அமைச்சர் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடரும் என அமைச்சர் அறிவிப்பு

By: Nagaraj Thu, 09 June 2022 3:18:01 PM

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடரும் என அமைச்சர் அறிவிப்பு

சென்னை: வகுப்புகள் தொடரும்... அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போது வகுப்புகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அ.தி.மு.க., ஆட்சியின் போது, தொடக்க பள்ளிகளையும், அங்கன்வாடிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதாவது, அரசு பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் அங்கன்வாடிகளில் படிக்கும் மாணவர்களை, அரசு பள்ளிகளின், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்பில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் கூறியதாவது:

lkg,ukg,class,advice,request,government schools ,எல்கேஜி, யுகேஜி, வகுப்பு, அறிவுரை, கோரிக்கை, அரசு பள்ளிகள்

பள்ளி கல்வித் துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதில், பணியாற்றிய ஆசிரியர்கள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கான பணியில், முழுமையாக ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல அரசியல் கட்சியினர்கள் அரசின் இந்த முடிவை திரும்ப பெற வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் கூறுகையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று முதல்வரின் அறிவுரையின்படி அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர் எனக் கூறினார்.

Tags :
|
|
|
|