Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 40%க்கும் குறைவாகவே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் .. அமைச்சர் எ.வ.வேலு தெரிவிப்பு

40%க்கும் குறைவாகவே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் .. அமைச்சர் எ.வ.வேலு தெரிவிப்பு

By: vaithegi Sat, 01 Apr 2023 3:21:46 PM

40%க்கும் குறைவாகவே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்  .. அமைச்சர் எ.வ.வேலு தெரிவிப்பு


சென்னை: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுவுள்ளது. இக்கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சுங்கச்சாவடி கட்டணங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் அதிகரித்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. அதன்படி, இன்று முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

minister av velu,customs fees ,அமைச்சர் எ.வ.வேலு, சுங்க கட்டணம்


இந்த நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:- தமிழகத்தில் இன்று 36 சுங்கச்சாவடிகளிலும் செப்டம்பரில் 22 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுள்ளது. விதிகளின் படிதான் சுங்கசாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அரசு சொல்கிறது. 5 சுங்கச்சாவடிகள் காலாவதியாகி செயல்பட்டதை அறிந்து மூட வலியுறுத்தியுள்ளோம்.

மேலும் சுங்க கட்டணம் உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. பராமரிப்புக்காக வசூலித்தாலும் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எவ்வளவு தூரம் பயணிக்கிறோமோ அதற்கு ஏற்றால் போல் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வர உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்" என அவர் கூறினார்.

Tags :