Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஜினிகாந்த் கட்சிக்கு அ.தி.மு.க.வினர் செல்லமாட்டார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

ரஜினிகாந்த் கட்சிக்கு அ.தி.மு.க.வினர் செல்லமாட்டார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

By: Monisha Sat, 12 Dec 2020 5:21:22 PM

ரஜினிகாந்த் கட்சிக்கு அ.தி.மு.க.வினர் செல்லமாட்டார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

ரஜினிகாந்த் கட்சிக்கு அ.தி.மு.க.வினர் செல்லமாட்டார்கள் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே கடந்த 3ந்தேதி உறுதிப்படுத்தினார். அவர் வெளியிட்ட செய்தியில், ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் பதிவிட்டார்.

rajinikanth,admk,minister,politics,assembly election ,ரஜினிகாந்த்,அ.தி.மு.க,அமைச்சர்,அரசியல்,சட்டசபை தேர்தல்

இதனை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுவரை வேறு கட்சிகளில் இருந்த அவரது தீவிர ரசிகர்கள் கூட ரஜினிகாந்தின் புதிய கட்சியில் சேரக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இது தொடர்பாக கூறுகையில், தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வருகையால் எந்த ஒரு புதுமையும் நடக்க போவதில்லை. மேலும், ரஜினிகாந்த் கட்சிக்கு அ.தி.மு.க.வினர் செல்லமாட்டார்கள் என்றும் உறுதிப்பட கூறினார்.

Tags :
|