Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் தேங்காய் பற்றாக்குறையை விளக்க மரம் ஏறிய அமைச்சர்

இலங்கையில் தேங்காய் பற்றாக்குறையை விளக்க மரம் ஏறிய அமைச்சர்

By: Nagaraj Sun, 20 Sept 2020 1:06:01 PM

இலங்கையில் தேங்காய் பற்றாக்குறையை விளக்க மரம் ஏறிய அமைச்சர்

இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டதை விளக்குவதற்கு அமைச்சர் அருந்திகா பெர்னான்டோ தென்னை மரம் ஏறி உள்ளார்.

நாட்டில் தற்போது தேங்காய் விளைச்சல் அதிகமின்றி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதை மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க அமைச்சர் அருந்திகா பெர்னான்டோ, டான்கோடுவா பகுதியில் உள்ள தமது எஸ்டேட்டில் இருக்கும் தென்னை மரத்தில் ஏற முடிவு செய்தார்.

minister,coconut tree,shortage,domestic consumption ,அமைச்சர், தென்னை மரம், பற்றாக்குறை, உள்நாட்டு நுகர்வு

அதற்காக உபகரணங்களை அணிந்த அவர் விறுவிறுவென அங்கிருந்த தென்னை மரத்தில் ஏறினார்.

பின்னர் அங்கிருந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு மற்றும் உள்நாட்டு நுகர்வுக்கு தேவையான 70 கோடி தேங்காய்கள் தற்போது பற்றாக்குறையாக உள்ளது என்றார்..

Tags :