Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் தொடர்பாக அமைச்சர் இன்று ஆலோசனை

10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் தொடர்பாக அமைச்சர் இன்று ஆலோசனை

By: Monisha Mon, 20 July 2020 10:21:30 AM

10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் தொடர்பாக அமைச்சர் இன்று ஆலோசனை

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸின் தாக்குதலால் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் இரண்டு முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டும் நோய் தாக்குதல் தீவிரம் அடைந்தததால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் 80 சதவீதமும் மற்றும் வருகைப்பதிவுக்கு 20 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

10th class,students,score,minister senkottayan,consultation ,10ம் வகுப்பு,மாணவர்கள்,மதிப்பெண்,அமைச்சர் செங்கோட்டையன்,ஆலோசனை

இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பள்ளிகல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அமைச்சர் செங்கோட்டையன், மதிப்பெண்களை காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் வழங்கலாமா அல்லது கிரேடு முறை அளிக்கலாமா என முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|