நீச்சல் குளத்தில் தினமும் நீர் நிரப்பாத அதிகாரியை வறுத்தெடுத்த அமைச்சர் துரைமுருகன்
By: Nagaraj Tue, 18 July 2023 6:30:25 PM
வேலூர்: விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் ஏன் தினமும் நீர் நிரப்பப்படவில்லை என்று அதிகாரியை கேள்விக் கணைகளால் வறுத்தெடுத்து விட்டார் அமைச்சர் துரைமுருகன்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரின் வருகையை ஒட்டி அந்த மைதானத்தில் இருந்த நீச்சல் குளத்தில் நேற்று மட்டும் நீர் நிரப்பப்பட்டு இருந்தது.
வேலூர் மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் தினமும் நீர் நிரப்பப்படுவதில்லை என்று அமைச்சர் துரைமுருகனுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அமைச்சர் துரைமுருகன், நீர் நிரப்பாத அதிகாரியை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார்.
அமைச்சர் துரைமுருகன் தொடர்புடையை அதிகாரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.