Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகாவிடம் தண்ணீர் இருந்தும் தர மறுக்கிறது ...அமைச்சர் துரைமுருகன்

கர்நாடகாவிடம் தண்ணீர் இருந்தும் தர மறுக்கிறது ...அமைச்சர் துரைமுருகன்

By: vaithegi Tue, 19 Sept 2023 11:15:51 AM

கர்நாடகாவிடம் தண்ணீர் இருந்தும் தர மறுக்கிறது  ...அமைச்சர் துரைமுருகன்


சென்னை : மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு சந்திப்பு நடத்தியது. தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி கர்நாடகா அரசுக்கு வலியுறுத்துமாறு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கோரிக்கை ஒன்றை விடுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் எண்ணம் கர்நாடகாவுக்கு இல்லை. கர்நாடகாவிடம் தண்ணீர் இருந்தும் தர மறுக்கிறது.

minister durai murugan,water,karnataka ,அமைச்சர் துரைமுருகன்,தண்ணீர் ,கர்நாடகா

தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் பற்றி மத்திய அமைச்சரிடம் விளக்கிக் கூறினோம். நெருக்கடியான நேரத்தில் நீர் பகிர்வை எப்படி தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது .உச்சநீதிமன்றம் கூறியபடி காவிரி நீரை வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம் என அவர் கூறினார்.

டெல்லியில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று வாரியம் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்தது.இருப்பினும் கர்நாடக அரசு இதனை பின்பற்றவில்லை.

Tags :
|