Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீர்ப்பை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும் .. அமைச்சர் துரைமுருகன் தெரிவிப்பு

தீர்ப்பை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும் .. அமைச்சர் துரைமுருகன் தெரிவிப்பு

By: vaithegi Fri, 22 Sept 2023 11:51:54 AM

தீர்ப்பை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும் .. அமைச்சர் துரைமுருகன் தெரிவிப்பு

சென்னை: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது , " காவிரியில் உரிய நீரை திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும். இல்லை என்றால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். உச்சநீதிமன்றம் கூட்டாட்சி தத்துவத்தில் உயர்ந்து நிற்பது .

இதையடுத்து அதன் உத்தரவை ஓர் அரசாங்கத்தின் நடத்துபவர்கள் புறக்கணிக்க முடியாது . காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.

minister durai murugan,government of karnataka ,அமைச்சர் துரைமுருகன் , கர்நாடகா அரசு

காவிரியில் எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்திற்கான பங்கு கர்நாடகா அரசு தர வேண்டும் . உச்ச நீதிமன்றமும் இதனை உறுதி செய்து உள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்தில் தற்போது கர்நாடக அரசு இருக்கிறது .

காவிரி நீர் பங்கீடு பிரச்சனையில் சட்டரீதியாக சென்று கொண்டிருக்கும்போது , பேச்சுவார்த்தையால் பயன் இல்லை. மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு அவசியம் இல்லை" என அவர் கூறினார்.

Tags :