Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆதார் எண்ணை இணைத்தாலும் இலவச மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்படும் .. அமைச்சர் விளக்கம்

ஆதார் எண்ணை இணைத்தாலும் இலவச மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்படும் .. அமைச்சர் விளக்கம்

By: vaithegi Fri, 18 Nov 2022 6:28:52 PM

ஆதார் எண்ணை இணைத்தாலும் இலவச மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்படும்  ..   அமைச்சர் விளக்கம்

சென்னை: இலவச மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்படும் .... கடந்த 2016 ஆண்டு முதல் தமிழகத்தில் 100 யூனிட் வரை மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இத்திட்டம் மூலமாக பல லட்சக்கணக்கில் மக்கள் பயனடைந்து கொண்டு வருகின்றனர்.இதையடுத்து இந்த நிலையில் இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

அதனால் தற்போது 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி கொண்டு வருகின்றன.

electricity supply,aadhaar no ,மின் விநியோகம் ,ஆதார் எண்

இதனை அடுத்து இது பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் ஆதார் எண்ணை இணைத்தாலும் இலவச மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் பெறவே ஆதார் இணைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது என அவர் விளக்கம் அளித்து இருக்கிறார். மேலும் பேசிய அவர் எல்லா இடங்களிலும் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Tags :