Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதியோர் உதவித்தொகை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பு

முதியோர் உதவித்தொகை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பு

By: vaithegi Sun, 29 Jan 2023 2:41:34 PM

முதியோர் உதவித்தொகை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பு

சென்னை: உதவித்தொகை இனி வீடு தேடி வழங்கப்படும் .... தமிழ்நாட்டில் ஆதரவின்றி தவிக்கும் முதியவர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு உதவித்தொகை வழங்கி கொண்டு வருகிறது..எனவே இதன் மூலம் 60 வயதை கடந்த முதியோர்கள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து கொண்டு வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த வருடங்களில் சிலருக்கு உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது.இதனால் முதியவர்கள் பொருளாதார ரீதியாபெரும் க சிரமத்திற்கு ஆளாகினர். இது பற்றி ஆராய்ந்து கடந்த 2022ம் ஆண்டு உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

i. periyasamy,scholarship,senior citizens , ஐ.பெரியசாமி,உதவித்தொகை ,முதியோர்

மேலும் அத்துடன் உதவித்தொகை பெற தகுதி பெற்ற நபர்கள் கண்டறியப்பட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் முதியோர் உதவித்தொகை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஐ. பெரியசாமி 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அதனையடுத்து அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 60 வயதை தாண்டிய அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை இனி வீடு தேடி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags :