Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் விளக்கம்

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் விளக்கம்

By: vaithegi Fri, 24 Mar 2023 4:15:44 PM

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் விளக்கம்

சென்னை: கொரோனாவால் பள்ளி கல்வித்துறை மட்டும் அல்ல அனைத்து துறைகளும் மாற்றம் அடைந்துள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் பேச்சு ..

தமிழகத்தில் 12-ஆம் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் கூறுகையில், கொரோனாவிற்கு முன், கொரனாவிற்கு பின் என இன்று பிரித்துப் பார்க்க வேண்டிவுள்ளது. கொரோனாவால் 2020-21-ம் காலகட்டத்தில் தேர்வின்றி பத்தாம் வகுப்பு தேர்வான மாணவர்களே தற்போது 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.

minister anbil,students ,அமைச்சர் அன்பில்,மாணவர்கள்

இதையடுத்து பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இடையில் நின்ற 1.90 லட்சம் மாணவர்களில் 78 ஆயிரம் பேரை தொடர்ந்து கண்காணித்து தேர்வு எழுத வைத்தோம். கொரோனாவால் பள்ளி கல்வித்துறை மட்டும் அல்ல அனைத்து துறைகளும் மாற்றம் அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags :