Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு உயர வாய்ப்பு ... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு உயர வாய்ப்பு ... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By: vaithegi Wed, 25 Oct 2023 11:45:55 AM

வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு உயர வாய்ப்பு  ...  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னையில் 'ஹெல்த் வாக்' சாலையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.இதையடுத்து அப்போது பேசிய அவர் , வருகிற நவ.4ஆம் தேதி 38 மாவட்டங்களில் 8 கிலோ மீட்டர் கொண்ட 'ஹெல்த் வாக் சாலை' தொடங்கப்படவுள்ளது;

பெசன்ட் நகரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக காலை 5 முதல் 8 மணி வரை பெசன்ட் நகர் அவன்யூ பகுதி சாலைகளில் கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை.

மேலும் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையின் சார்பில் ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெறவுள்ளது.

minister m. subramanian,dengue ,அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,டெங்கு

கொரோனா காலத்திற்குப் பிறகு சமீபகாலமாகவே இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து கொண்டே வருகிறது; மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம்.

கடந்த 10 மாதங்களில் 5,600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 பேர் இறந்துள்ளனர்; வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என அவர் கூறினார்.

Tags :