Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கும், கவர்னருக்கும் இனிமேல் எந்தவித சம்பந்தமும் இல்லை ..அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கும், கவர்னருக்கும் இனிமேல் எந்தவித சம்பந்தமும் இல்லை ..அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By: vaithegi Sun, 13 Aug 2023 3:37:23 PM

நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கும், கவர்னருக்கும் இனிமேல் எந்தவித சம்பந்தமும் இல்லை ..அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக உள்ளதால் நீட் விலக்கு மசோதாவுக்கும், ஆளுநருக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை .... ‘எண்ணித் துணிக’நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி , “நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். கல்வி பொதுப் பட்டியிலில் உள்ளது.

‘நீட்’ தேர்வு ரத்து மசோதா, குடியரசுத்தலைவரிடம் உள்ளது. எனவே அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் எனக்கு இருந்தால், நீட் தேர்வு விலக்கு மசோதாவில் நான் கண்டிப்பாக கையெழுத்து இட மாட்டேன்” என பேசியிருந்தார். இதையடுத்து ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

minister m. subramanian,neet exam ,அமைச்சர் மா.சுப்பிரமணியன்,நீட் தேர்வு

இந்த நிலையில் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இன்னும் மருத்துவக் கல்லூரி வராமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம். மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் தான் மாவட்ட மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு காலதாமதம் ஆகி கொண்டு வருகிறது.

மேலும் நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், கவர்னர் கையெழுத்திடமாட்டேன் என கூறுவது மிகவும் வேடிக்கையாகவே உள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கும், கவர்னருக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை. அரசின் நலத்திட்டங்களை அரசோடு இணைந்து மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய கவர்னர் அரசியல் செய்வதுபோல் எதிராக செயல்படுவது உள்நோக்கம் பொருந்தியதாகவே இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

Tags :