Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காய்ச்சல் .. விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

காய்ச்சல் .. விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

By: vaithegi Wed, 15 Mar 2023 5:55:21 PM

காய்ச்சல் ..  விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை ..  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

சென்னை: இந்தியா முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், எனவே இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வைரஸ் காய்ச்சல் பரவலையடுத்து, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவரை சந்தித்து பரிசோதிக்குமாறும், 3 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ma.subramanian,fever , மா.சுப்பிரமணியன் ,காய்ச்சல்

இதனை அடுத்து இந்த நிலையில், புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவலையடுத்து, நாளை முதல் 26-ம் தேதி வரை 1-8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து, புதுச்சேரி விடுமுறையை தொடர்ந்து, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், காய்ச்சல் காரணமாக விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags :